வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (16:51 IST)

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வயநாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி: மல்லிகார்ஜுன கார்கே

Mallikarjun Kharge
உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு வயநாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
 
 காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை குஜராத் உயர்நீதிமன்றம் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் மன்றத்தின் தீர்ப்பை  நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட் அதிரடியாக பல கேள்விகளையும் எழுப்பியது.
 
இந்த நிலையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆகி உள்ளார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறியபோது, ‘ சாமானிய மக்களின் குரல் ஜனநாயகத்தின் கோவிலில் மீண்டும் ஒலிக்கும் என்றும் உண்மை மற்றும் தைரியத்தின் சின்னமாக ராகுல் காந்தி மாறி உள்ளார் என்று தெரிவித்தார். 
 
மேலும் இந்த தீர்ப்பு வயநாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் ராகுல் காந்திக்கு எதிரான பாஜகவின் அரசியல் சதித்திட்டம் வெளிப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran