செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 9 மே 2024 (07:45 IST)

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்: தங்கும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை

ஊட்டி மட்டும் கொடைக்கானல் செல்வதற்கு இ-பாஸ்  நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில் ஏற்கனவே இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது ஊட்டியில் தங்கும் விடுதி வைத்துள்ளவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மே 7ஆம் தேதி முதல் ஊட்டி , கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர் என்பதும் இந்த நடைமுறை சுற்றுலா பயணிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த கூடாது என்று ஏற்கனவே கொடைக்கானல் ஊட்டியில் உள்ள கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் தெரிவித்த நிலையில் தற்போது அங்கு தங்கும் விடுதி வைத்திருக்கும் உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

தங்களுக்கு வருமானம் குறைந்து வருவதாகவும் இதனால் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். இந்த கோரிக்கை ஏற்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva