1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Highest rain fall registered in Puthukottai

தமிழகத்தில் அதிகபட்ச மழை பொழிவு எங்கு தெரியுமா?

தமிழகம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணமேல்குடியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணமேல்குடியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. மேலும் சிவகங்கை, மதுரை புலிப்பட்டியில் தலா 12 செ.மீ., திருச்சி, வாத்தலை, பொன்னமராவதி, நத்தத்தில் 11 செ.மீ. மழை பொழிந்துள்ளது.  
 
அதோடு ஈரோடு, பவானி, கொடுமுடி, காமாட்சிபுரத்தில் 10 செ.மீ., புதுக்கோட்டை, பெரம்பலூர், ஆலங்குடியில் 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
டிஸ்சார்ஜ் ஆனதும் கொடநாடு போக ஆடர் போட்ட ஜெ.: சசி திடுக்கிடும் தகவல்!