திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (09:34 IST)

பின்னால் அமர்பவர்களுக்கு ஹெல்மெட்: இன்று முதல் வேலூரில் கட்டாயம்!

Helmets
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருசக்கர வாகனங்களில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் சென்னையை அடுத்து வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இந்த விதிகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்க வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
வேலூர் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த முறை விரைவில் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது