செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 28 மே 2022 (21:54 IST)

சென்னையை பின்பற்றும் மும்பை: பின்சீட் நபருக்கும் ஹெல்மெட்!

helmet
சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின் சீட்டில் உட்கார்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சமீபத்தில் விதி அமல் படுத்தப்பட்டது என்பதும் இந்த விதியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்திருந்தது 
 
இதை அடுத்து சென்னையில் பல இடங்களில் சோதனை செய்து இரு சக்கர வாகனத்தில் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையை அடுத்து மும்பையிலும் பின்சீட்டில் அமர்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என மும்பை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளன
 
இந்த விதி அடுத்த 15 நாட்களில் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பின்சிட்டில் உட்கார்ந்து இருப்பவர்  ஹெல்மெட் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து உள்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்