செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (12:39 IST)

அடுத்த 1 மணி 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

அடுத்த ஒரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
வட கிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை நெல்லை காஞ்சிபுரம் விழுப்புரம் வேலூர் தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது