1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2024 (15:33 IST)

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

வங்க கடலில் புயல் உருவாகும் வாய்ப்புள்ள நிலையில் சென்னையில் ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ள நிலையில் நாளை புயல் சின்னமாக வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது,

 

புயல் காரணமாக தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை முதல் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பால், உணவுப் பொருட்களை வாங்க கடைகளில் குவியத் தொடங்கியுள்ளனர்.

 

இந்நிலையில் சென்னையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை குறைக்க சென்னையில் 8 இடங்களில் 24 மணி நேரமும் ஆவின் பாலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணாநகர் டவர், மாதவரம் பால் பண்ணை, வண்ணாந்துரை, பெசண்ட் நகர், வசந்தம் காலணி, அண்ணாநகர் கிழக்கு, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், சி.பி.ராமசாமி சாலை ஆகிய 8 இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு நபருக்கு அதிகபட்சம் 4 பால் பாக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K