இன்னும் சிலமணி நேரத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை : வானிலை எச்சரிக்கை..!
இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது என்பதும் இதனால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஏராளமான சேதம் ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது அரபி கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து மேற்கண்ட 9 மாவட்டங்களில் நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Mahendran