1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 13 டிசம்பர் 2023 (07:43 IST)

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்: சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!

கடந்த 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் ஆட்டி படைத்தது என்பதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாகவும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் வெளியான செய்தி அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையான நீங்கி மக்கள் நிம்மதியாக இருக்கும் நிலையில் திடீரென மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதாக சிங்கப்பூர் அரசு  தனது நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.

எனவே முக கவசம் அணிதல், கொரோனா தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை தீவிரப்படுத்த வேண்டும் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.  சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அங்குள்ள மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.  

சிங்கப்பூர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தேவைப்பட்டால் உதவ தயாராக இருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva