1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (08:25 IST)

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் மாற்றம்.. புதிய தலைவர் யார்?

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம்  செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக வக்கீல் சுதா பதவி வகித்த நிலையில் வக்கீல் சுதா மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக களமிறங்கினார். எனவே சுதாவுக்கு பதிலாக மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மயிலாடுதுறை தொகுதியில் மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த வக்கீல் ஆர்.சுதா போட்டியிட்டதால் தான் அவருடைய பதவி ஹசீனா சையத் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva