வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (15:20 IST)

பாலியல் தொந்தரவு : பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு

Makudeeswaran
பழனி அருகே பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் தொந்தரவு செய்ததாக பாஜக நிர்வாகி மகுடீஸ்வரன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
பழனி அருகே சாமிநாதபுரம் கிராமத்தில் பள்ளியில் காலை உணவுத் திட்டப் பொறுப்பாளராக உள்ள பெண்ணிடம், மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்ததாக, பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
 
தலைமறைவாக உள்ள மகுடீஸ்வரனை போலீஸார் தேடி வருகின்றனர். இவரது மனைவி செல்வராணி புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.
 
காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய வந்துள்ளதாக கூறி...காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக உள்ள பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
 
தற்போது தலைமறைவாக உள்ள மகுடீஸ்வரனை போலீஸார் தேடி வருகின்றனர்.