வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (14:58 IST)

ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்தில் நான் தூங்கவே இல்லை: அர்ஜுனமூர்த்தி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்தில் நான் தூங்கவே இல்லை என அர்ஜுன மூர்த்தி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக கூறப்பட்ட சமயத்தில் இவர் தான் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகி என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அர்ஜுன மூர்த்தி தனது பதிவில் கூறியிருப்பதாவது
 
நம் அன்பு தலைவர் ரஜினிகாந்த்  அவர்கள் மருத்துவமனையில் சேர்ந்த அன்று இரவு எனக்கு சரியான தூக்கம் இல்லை. ஏனென்றால், அவர் மேல் நான் கொண்டுள்ள அன்பும், விசுவாசம் அளவிட முடியாதது. அந்த அன்பிற்கும், விசுவாசத்திற்கும் அவரே காரணமாவார்! ஓர் உண்மை சம்பவத்தை அதற்கான எடுத்துக்காட்டாக, அவர் பிரியப்படாவிட்டாலும், நான் இங்கே கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
 
கொரோனா பெரும் தொற்றால் நாடு ஸ்தம்பித்த நிலையில், அவரும் நானும் தொலைபேசியில் அதனால் விளையும் மோசமான நிகழ்வுகளை பற்றி மிக்க துயருடன் உரையாடிக் கொண்டிருந்தோம். அச்சமயத்தில் நான் அவரிடம், ஏழை எளிய தின கூலிகள் உயிர் வாழ உணவுக்கே துன்புறும் நிலைகளை எடுத்துரைத்தேன். முடிந்தால் அவ்வடித்தட்டு மக்களின் நலம் விரும்பி ஏதேனும் உதவி செய்ய அரசாங்கத்தை வலியுறுத்த அன்றைய ட்விட்டர் தளத்தில் வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டேன். அமைதி காத்தார்…
 
அடுத்த நாள் ஓர் அழகான பதிவினை எழுதி இது சரியாக இருக்குமா? என்று வினவினார். உடன் செயல்பட்டார்… அதன் விளைவே அன்றைய அரசாங்கம் மூவாயிரம் ரூபாய் ஏழை எளியவர்க்கு வழங்கியதற்கு ஒரு வினையூக்கியாக இருந்தார் என்பது நிதர்சனமான உண்மை! 
 
நான் அரசாங்கம் உதவித்தொகையினை அறிவித்த பின் அவரிடம், நாம் நன்றி தெரிவிக்கலாமா, என்றேன்?  அவர் ஒற்றை வரியில் ‘வேண்டாம்’  என்றார். அது அரசாங்கத்தின் கடமை, மிக்க சிறப்பாக செயல்படுத்தினார்கள். அதுவே நமக்கு மனசாந்தியை அளிக்கிறது. அதில் நம்மை உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை, என்றார் கறாராக. அன்று தான் நான் அவரின் உயரமும், அவர் அன்பும் எத்தனை பவித்திரமானது என்பதை உணர, இறையருளால் என்னை விழிப்படையை செய்த ஓர் நிகழ்வே அது, ஆகும்!
 
இது போன்ற மகாபுருஷர்கள் எம்பெருமான் அறுபடைப்பரின் அருளால் நலத்துடன், பலத்துடன் நீடுழி வாழ பிராத்திக்கின்றேன்
 
Edited by Mahendran