1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (15:06 IST)

வாகன விபத்தில் குழந்தை பலி-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்!

திருச்சி மேல குழுமணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் வயது (30) கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
 
இவரது,மனைவி பிரபாவதி சித்தாள் வேலை செய்து வருகிறார்.
 
இவர்களது மகள் சுபஸ்ரீ ஒன்றரை வயது ஆகிறது
தாய் பிரபாவதியுடன் உறையூர் குழுமணி சாலையில் உள்ள மெடிக்கலுக்கு சென்றுள்ளனர்.
 
அப்போது சாலையின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுபஸ்ரீ  மீது அவ்வழியே சென்ற இருசக்கர வாகன மோதி சுபஸ்ரீ படுகாயம் அடைந்தார்.
 
குழந்தையை மீட்டு குழுமணி அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர்.
 
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சுபஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை குழு மணி பஸ் நிறுத்தம் அருகே குழந்தை சுபஸ்ரீ உயிருக்கு காரணமாக இருந்த இருசக்கர வாகன ஒட்டியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 
 
பின்பு அங்கு வந்த தாசில்தார் தமிழ்செல்வன்  விபத்துக்கு காரணமானவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.