ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 ஜூலை 2024 (09:10 IST)

சமயபுரம் பாத யாத்திரையில் சோகம்! சரக்கு வாகனம் மோதி 5 பேர் பரிதாப பலி!

Accident

சமயபுரத்திற்கு பாத யாத்திரையாக சென்ற பெண்கள் சரக்கு வாகனம் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் பலரும் அம்மன் கோவில்களுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறாக பல பக்தர்களும் திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வேண்டிக் கொண்டு பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

அவ்வாறாக சில பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுக் கொண்டிருந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே வளம்பகுடி பகுதியில் சாலையில் அவர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது சரக்கு வாகனம் மோதியதில் 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
 

போலீஸ் விசாரணையில் இறந்தவர்கள் பெயர் மீனா, ராணி, மோகனாம்பாள், லெட்சுமி மற்றும் முத்துசாமி என தெரிய வந்துள்ளது. மேலும் சங்கீதா என்ற பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோவிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் வாகனம் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K