வண்ணக்கயிறு உத்தரவு வாபஸ்! அமைச்சருக்கு எச்.ராஜா டுவிட்டரில் நன்றி!

Last Modified வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (10:48 IST)
சமீபத்தில் பள்ளிக்கல்வி இயக்குநர் ஒரு சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பினார். அந்த சுற்றறிக்கையில் பள்ளி மாணவர்கள் தங்கள் ஜாதி மற்றும் மத அடையாளங்களை குறித்த கயிறு கட்டிக் கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு அரசியல்வாதிகள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் இருந்த நிலையில்
பிரமுகர் எச் ராஜா இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்

நெற்றியில் திலகமிடுவதும் கையில் கயிறு கட்டுவதும் ஹிந்து மத நம்பிக்கை தான் என்றும் இதுதொடர்பான பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து நேற்று நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'பள்ளி மாணவர்கள் தங்கள் மத அடையாளங்களுக்கு ஆன கயிறுகள் கட்டவும் நெற்றியில் திலகமிடவும் எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று கூறினார். மேலும் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை குறித்து தங்கள் கவனத்திற்கு வரவில்லை என்றும் பள்ளி மாணவர்கள் ஜாதி மத அடையாளங்களை எப்படி தற்போது பின்பற்றுகிறார்களோ அதே முறை தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றும் கூறினார்
இதனை அடுத்து இதற்கு நன்றி கூறும் வகையில் ராஜா என்று ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் இந்து மத நம்பிக்கை சார்ந்த கயிறு கட்டுவதற்கும், நெற்றியில் திலகமிடுவதற்கும்
தடையில்லை. ஆனால் நேற்றைய முன்தினம் அமைச்சர் அவர்களை கலக்காமல் சுற்றறிக்கை வெளிப்பட்டது என்றும் கூறியுள்ளார். எனவே இந்துமத உணர்வுகள் காயப்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :