என் உயிருக்கு ஆபத்து... பதபதைக்கும் குரலில் ஜெ தீபா வெளியிட்ட ஆடியோ!

Last Modified செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (16:07 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அந்த ஆடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது, ராஜா என்பராலும், அவரைச் சார்ந்த நபர்களாலும் எனக்கும், எனது கணவர் மாதவன் ஆகிய எங்களின் இருவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்பதை ஏற்கனவே நான் தெரிவித்திருக்கிறேன். 
 
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை காவல்துறையிடமும் கொடுக்க உள்ளேன். ராஜா ஒருமுறை எனது வீட்டுக்கு முன் ஏதோ ஒரு கூட்டம் நடக்கும் சமயம் எங்கள் இருவர் மீதும் திராவகம் வீசப்படும் என்று சொன்னதற்கு எல்லா ஆதாரம் இருக்கிறது. 
 
இதுபோல எத்தனையோ நடந்து விட்டது. அதை காவல்துறையிடம் முறையாக கொடுக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். மொத்தத்தில் எங்களை வீழ்த்த வேண்டும் என ஒரு கூட்டு சதி நடக்கிறது. 
என்னை என் கணவரிடம் இருந்து பிரித்துவிட்டு எப்படியாவது என்னையும் தனிமைப்படுத்தி ஏதோ செய்ய வேண்டும் என்று சதி திட்டம் அவர்களிடம் இருக்கிறது. நிரந்தரமாக என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம்.
 
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற அடையாளத்தையே நான் இழந்துவிட வேண்டும் என்று என் மேல் வீண் பழி சுமத்தி கெட்ட பெயர் உருவாக்க வேண்டும், மக்களிடம் நல்ல பெயரோ, நல்ல எண்ணமோ என் மீது இருக்கக்கூடாது என்பதுதான் சதி என ஆடியோவில் பேசியுள்ளார். 
 
உண்மையில் இந்த ஆடியோவில் பேசியது தீபாதானா என்ற சந்தேகம் உள்ள நிலையில் அதை தெளிவுப்படுத்தும் நோக்கத்தில் போலீஸார் உள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :