சசிகலா மவுன விரதம்: நேரில் சென்று விசாரிக்க வருமான வரித்துறை முடிவு?

Last Modified புதன், 31 ஜனவரி 2018 (12:42 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரபரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா கடந்த சில வாரங்களாக மவுன விரதம் இருந்து வருவதால் என்னிடம் பேசவில்லை. நான் கூறியதை கேட்டுக்கொண்டார் என அவரது உறவினர் டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் வருமான வரித்துறை விசாரணைக்கும்  சசிகலா தரப்பில் இருந்து இதே பதில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
சில மாதங்களுக்கு முன்னர் போயஸ் கார்டனில் உள்ள சசிகலா அறையில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் அவரது அறையில் இருந்து, குட்கா ஊழல் தொடர்பான சில ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்கள் கசிந்தன.
 
இந்நிலையில் சசிகலா அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட குட்கா ஊழல் தொடர்பான கடிதம் தொடர்பாக விசாரிக்க வருமான வரித்துறை சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் அளித்த சசிகலா, தான் மவுன விரதத்தில் இருப்பதால் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என கூறியதாக தகவல்கள் வருகின்றன.
 
இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேரில் சென்று சசிகலாவை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :