தமிழகத்தில் தேசிய கட்சியால் காலுன்ற முடியாது: ஒபிஎஸ் அதிரடி!!

Last Modified செவ்வாய், 30 ஜனவரி 2018 (21:54 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிபடையாகவே எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் எந்த காலத்திலும் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னையில் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாலர்களை சந்தித்த பன்னீர் செல்வம் பின்வருமாரு பேசினார்.


தமிழகத்தில் எந்த நிலையிலும், எந்த காலத்திலும் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது, இதனை தமிழக மக்கள் அனுமதிக்கவும் மாட்டார்கள். ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையம் என்னை அழைத்தால் செல்வேன் என்று தெரிவித்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :