செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (10:13 IST)

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் அதிகரிப்பு!

students
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
தனியார் பள்ளிகளில் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பதாகவும் அரசு பள்ளிகளில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக வசதிகள் அதிகரித்து விட்டதாகவும் பெரும்பாலான ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர் 
 
அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 20 லட்சம் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
தமிழகத்தில் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 70 லட்சம் என அதிகரித்துள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வருங்காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது