செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:59 IST)

அபார்ட்மெண்ட்டுக்குள் வந்த மாடுகள்… தட்டிகேட்ட செக்யூரிட்டிக்கு செருப்படி- அரசு ஊழியரின் ஆணவம்!

புதுச்சேரியில் செக்யூரிட்டியாக வேலைபார்க்கும் நபர் மற்றும் அவரின் மனைவியை அரசு ஊழியர் ஒருவர் செருப்பால் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை அடுத்த தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சுப்புராயன் (65). இவரது மனைவி லட்சுமி (59). இவர்கள் இருவரும் அங்குள்ள ஜெயா நகரில் ஒரு அபார்ட்மெண்ட்டிலேயே தங்கி காவலாளிகளாக வேலைப் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அந்த அபார்ட்மெண்ட்டுக்குள் அடிக்கடி சரவணன் என்பவரின் மாடு உள்ளே வந்துள்ளது . இந்த சரவணன் என்பவர் அரசு ஊழியர் என சொல்லப்படுகிறது.

மாடு உள்ளே வருவது குறித்து சுப்புராயன் சரவணனிடம் புகார் சொல்லியுள்ளார். ஆனால் சரவணனோ திமிராக பேச இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகியுள்ளது. ஒரு கட்டத்தில் சரவணன் தன் செருப்பை எடுத்து தம்பதிகள் இருவரையும் அடித்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகவே இப்போது போலிஸார் சரவணன் மேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.