1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (09:56 IST)

உயர்கிறது படப்பிடிப்புக்கான கட்டணம்: புதுச்சேரி அரசு அதிரடி!

புதுச்சேரியில் நடத்தப்படும் படப்பிடிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏராளமான படப்பிடிப்புகள் புதுச்சேரியில் நடப்பது வழக்கம். பல மொழி படங்களும் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். புதுச்சேரியில் படப்பிடிப்பு குறைந்த விலையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.
 
இக்கட்டணத்தை உயர்த்த பல தரப்பும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அரசு உயர்த்தாமல் இருந்தது. ஆனால் கொரோனாவால் அரசுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், தற்போது சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்புக்கான கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்தது. 
 
இதற்கு கிரண்பேடியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே, உயர்த்தப்பட்ட ஷூட்டிங் கட்டணங்களுக்கான அறிவிப்புகளை அரசு அமைச்சரவையில் வைத்து  முறைப்படி வெளியிடும்.