புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (18:39 IST)

கோமதி கிழிந்த காலணி விவகாரத்தில் திடீர் திருப்பம்

தமிழகத்தை சேர்ந்த தங்கமங்கை கோமதி, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம்  வென்றதை விட அவருக்கு அரசு உதவி செய்யவில்லை, கிழிந்த காலணியை பயன்படுத்தினார் போன்ற சர்ச்சைகள் பெரிதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டன. சமூக வலைத்தள திடீர் போராளிகள் அரசுக்கு எதிராகவும், கோமதிக்கு ஆதரவாகவும் சில கருத்துக்களை பதிவு செய்தனர். 
 
இந்த நிலையில் வருமான வரித்துறையில் ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்கும் கோமதியிடம் ஒரு காலணி வாங்க காசில்லையா? அரசு உதவி செய்யாமல் எப்படி அவரால் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள முடியும் என எதிர்த்தரப்பினர் வாக்குவாதம் செய்ய, இருதரப்பினர்களும் சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக மோதி வந்தனர்.
 
இந்த நிலையில் 'அதிர்ஷ்டமான காலணி என்பதால் பழைய காலணியை பயன்படுத்தியதாகவும், என்னிடம் காலணி இல்லை என்பதில் உண்மையில்லை' என்றும் கோமதி மாரிமுத்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். 
 
தங்கம் வென்ற வீராங்கனையை வைத்து அரசியல் மற்றும் ஜாதி பிரச்சனை செய்து வருபவர்களுக்கு கோமதியின் இந்த விளக்கம் தக்க பதிலடியாக இருந்துள்ளது.