1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2019 (12:18 IST)

சும்மா இல்ல ரூ.3,640 உயர்ந்து... புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

வரலாறு காணாத வகையில் ரூ.30,000-த்தை தாண்டி தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று தங்கத்தின் விலை ரூ.288 உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,120-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து, ரூ.3,765-க்கு விற்கப்படுகிறது. கடந்த 40 நாட்களில் சவரனுக்கு தங்கத்தின் விலை ரூ.3,640 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இதேபோல் வெள்ளி விலை ரூ.2.60 உயர்ந்து ரூ.55.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று காலை ரூ.29,744-க்கும், மாலை ரூ.29,832-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று வரலாறு காணாத அளவிற்கு ரூ.30,120 விற்கபடுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.