புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (17:22 IST)

சாலையில் திடீரென உருவான பள்ளம்; அதிர்ச்சியடைந்த மக்கள்

சென்னையில் 15 அடி ஆழத்துக்கு திடீரென சாலையில் ஒரு பள்ளம் உருவானதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை அண்ணா நகரில் உள்ள சாந்தி காலணியில், இன்று காலை திடீரென 15 அடிக்கு பள்ளம் உருவானது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அப்படியே நிறுத்தினர்.

உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வாகனங்களை வேறு பாதைகளில் திருப்பி விட்டனர். பின்பு இரும்புகளை பள்ளத்தை சுற்றி தடுப்புகளாக வைத்தனர்.

கழிவு நீர் கால்வாயால் பள்ளம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தில் இருந்த கழிவுநீரை வெளியேற்றி பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பள்ளம் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.