செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 6 ஜூன் 2022 (17:31 IST)

கோகுல்ராஜ் கொலை வழக்கு: 10 பேர் தண்டனை நிறுத்தி வைப்பா?

yuvaraj
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் தண்டனையை நிறுத்திவைக்க முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை
கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பில் யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த  நிலையில் யுவராஜ் உள்பட 10 பேர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவில் தனியார் தொலைக்காட்சி பேட்டி மற்றும் சிசிடிவி காட்சியின் அடிப்படையில்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது என்றும் எனவே அந்த தீர்ப்பை ரத்து செய்யவும் என்றும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்கவும் வேண்டுகிறோம் என்று கூறப்பட்டிருந்தது 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. மேலும் கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்ககோரிய வழக்கு ஜூலை 6க்கு ஒத்திவைக்கப்பட்டது.