புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (18:32 IST)

காதலி கண்முன்பே காதலனுக்கு அரிவாளால் வெட்டு ... தந்தை செய்த வெறிச்செயல்...

அரியலூர் மாவட்டம் நாணாங்கூர் கிராமத்தில் வசிப்பவர் ரங்கேசன் மகன் அஜித் குமார். இவருக்கும் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகள் முத்துராணிக்கும் சமீபத்தில் காதல் திருமணம் நடைபெற்றது. அஜித் - முத்துராணி இருவரும் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
மகள் வீட்டைவிட்டு காணாமல் போனதால் முருகானந்தம் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர் போலீஸார் அஜித் - முத்துராணியை கண்டுபிடித்து திரும்ப அழைத்து வந்தனர்.  ஆனால் முத்துராணி மேஜர் பெண் என்பதால் அவர் காதலன் அஜித்துடன் வாழ்வதாக தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து அஜித், தன் காதல் மனைவி முத்துராணி குடும்பத்தினரை ஒரு காரில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
 
அப்போது அஜித்தை கொல்ல வேண்டும் என முத்துராணியின் அப்பா முருகானந்தம் தன் நணர்களுடன் சதித்திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் கீழப்பழுவூர் பெட்ரோல் பங்கில் அருகில் கார் சென்று கொண்டிருக்கும் போது குறுக்கே வந்த முருகானந்தமும்  அவரது நண்பர்கள் காரில் கண்ணாடியை உடைத்து: அஜித், அவரது குடும்பத்தினர் உட்பட எல்லோரையும் அருவாளால் கண்டபடி தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.
 
இந்த தாக்குதலில் அஜித்தின் குடும்பத்தினர் பலத்த காயம் அடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் 5 பேரையும் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட முகராஜ், முரளிகிருஷ்ணன், விக்னேஷ்வரன், ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். தற்போது தலைமறைவாக இருக்கும் முத்துராணியின் தந்தை முருகானந்தத்தை போலீஸார் தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.