செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 27 ஜனவரி 2024 (18:40 IST)

பிஸ்கெட் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு...

ballet dancer
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் பிஸ்கெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் வசிந்து வந்தவர்  இளம் பெண் ஓர்லா பாக்செண்டேல்(25). இவர் பாலே நடனக் கலைஞராக பிரபலமாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், இவருக்கு பிஸ்கெட் பிடிக்கும் என்பதால், தனக்குப் பிடித்தமான பிஸ்கெட் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர், இவரது  உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டு இவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, இவருக்கு ஏற்கனவே வேர்க்கடலையில் அலர்ஜி உள்ள நிலையில், அவர் சாப்பிட்ட பிஸ்கேட்டிலும்   வேர்க்கடலை சேர்க்கப்பட்டுள்ளது. இது தெரியாமல்,  பாலே நடனக் கலைஞர் ஓர்லா இதை சாப்பிட்டதால் உயிரிழந்தார்.

அந்த பிஸ்கெட்டிலும் இதைக் குறிப்பிடவில்லை  என்று கூறப்படுகிறது.