வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 2 மார்ச் 2018 (12:31 IST)

ஜெயலலிதாவினால் அமைக்கப்பட்ட அமைச்சர்களை பைத்தியங்கள் என்பதா? கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் பேச்சு

தமிழக அளவில் ஆளுகின்ற அ.தி.மு.க கட்சியை விமர்சனம் செய்வது என்றால் தி.மு.க மற்றும் பிற கட்சிகள் என்ற நிலையில், கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், இந்நாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இடையே கடும் போட்டி மற்றும் பிரஸ் மீட் என்கின்ற நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் கரூர் திருமாநிலையூர் பகுதியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அரசு சார்பில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், கரூர் தொகுதி எம்.எல்.ஏ மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரை திட்டி தீர்த்தார். அ.தி.மு.க வை சார்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அதே துறையை தற்போது வகிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொட்டித்தீர்த்தவாறே, அதே முறையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கொட்டி தீர்த்ததோடு ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிலையில் கரூர் மருத்துவக்கல்லூரி விவகாரமும், அவர் (வி.செந்தில் பாலாஜி) கொண்டு வந்த திட்டம் என்பதினால், அப்படியே அத்திட்டத்தை மாற்றி, வேறு இடத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமி பூஜையையும் செய்தார். மேலும் செந்தில் பாலாஜி கொண்டு வந்த ரிங் ரோடு திட்டத்தினை வேறு வழியில் கொண்டு வந்ததோடு, தற்போது பிரஸ் மீட், ஒரு பொதுக்கூட்டம் என்று அனைத்தையும் தி.மு.க கட்சியை விமர்சனம் செய்வதோடு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னாள் அமைச்சரையே விமர்சனம் செய்து வந்தார்.

ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், கரூர் உழவர் சந்தை பகுதியில் டி.டி.வியின் அ.தி.மு.க அம்மா அணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் தற்போதைய அமைச்சர் வகித்து வரும் போக்குவரத்து துறையில் கடுமையான கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளதோடு, அதற்கு முழுக்க, முழுக்க எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நிர்வாக சீர்கேடு என்பதோடு, மக்களவை துணை சபாநாயகரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பித்துரைக்கு வாக்குகள் கேட்டதற்காக நான் மன்னிப்பு கேட்கின்றேன் என்று கூறி பொதுக்கூட்ட உரையை முடித்தார் செந்தில் பாலாஜி. ஆனால் அதற்கு பிறகு தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பிரஸ் மீட், பொதுக்கூட்டம் என்று அனைத்தையும், தி.மு.க கட்சியை விமர்சிக்கின்றாரோ ? இல்லையோ முழுக்க, முழுக்க செந்தில் பாலாஜியை காரம் சாரமாக திட்டி வருவதோடு, அதுவே அவரது பழக்கமான நிலையில்,

கரூர் மாவட்டம், தாந்தோன்றி மேற்கு ஒன்றியத்தின் சார்பில்,. தாந்தோன்றி ஒன்றிய (மேற்கு) செயலாளர் எஸ்.வேலுசாமி தலைமையில், கரூர் அடுத்த பெரியாண்டாங்கோயில் (ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி) எம்.ஜி.ஆர் திடலில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன், இந்திய அளவில் தமிழக மக்களுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை எடுத்துக் கூறினார். மேலும்  துரோகத்தை விட்டு விடுங்கள், அம்மா (ஜெயலலிதாவின்) ஆட்சியில் துரோகத்தை பார்த்து நினைக்காதீர்கள், பாசிட்டிவ் பத்தி நினைங்கள், நெகட்டிவ் பத்தி விட்டு விடுங்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கே அட்வைஸ் செய்ததோடு, இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டினார்.

மேலும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இந்த அமைச்சர் பற்றியோ, மற்ற அமைச்சர்கள் பற்றியோ அவதூறு பரப்பினால், அதை நினைக்காதீர்கள், அவ்வாறு அவதூறு செய்யாதீர்கள். எதை பற்றியும் நினைக்காதீர்கள் என்றதோடு, ஜெயலலிதாவினால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் தான் தற்போது உள்ளனர். ஆகையால் அமைச்சர்களை பைத்தியம் என்கின்றார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு நாகரீகமற்றவர்கள் என்று நினைத்து கொள்ளுங்கள், மேலும் எங்களுக்கு (பொதுமக்கள்) அதை செய்து தருகின்றோம், இதை செய்து தருகின்றோம் என்று மடக்க நினைப்பார்கள். அவ்வாறு ஏமாந்து போக வேண்டாம். மேலும் ஆட்சியை பற்றியும், கட்சியை பற்றியும் யாராவது பேசினால் அவரை ஒதுக்கி வையுங்கள் என்று கூறினார்.


கரூர் சி.ஆனந்தகுமார்