வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி: மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்..!
நாளை வங்க கடலில் குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாக இருப்பதை அடுத்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மே 7ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அது வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நாளை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றயிருப்பதை அடுத்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை அதாவது மே 7ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Edited by Mahendran