திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Modified: ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (12:35 IST)

மீனவர்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடக்கூடாது: பேனா நினைவு சின்னம் குறித்து ஜெயக்குமார்..!

மீனவர்கள் வாழ்வாதாரத்தோடு விளையாட கூடாது என பேனா நினைவுச்சின்னம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 
 
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பதும் இதற்காக மதிய அரசும் ஒரு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
ஆனால் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கூடாது என சீமான் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேனா நினைவு சின்னம் குறித்த கேள்விக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தோடு விளையாட கூடாது என்றும் சென்னை மெரினாவில் அமைய உள்ள பேனா நினைவுச்சின்னம் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இருப்பிடம் திமுக அரசு பேனா நினைவு சின்னத்தை அமைப்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது
 
 
Edited by Siva