1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2024 (07:12 IST)

இன்று முதல் சுங்க‌க் கட்டணம் உயர்வு அமல்.. மாதாந்திர பாஸ் கட்டணமும் உயர்வு..!

இன்று முதல் சுங்க‌க் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படுவதாகவும், மாதாந்திர பாஸ் கட்டணமும் உயர்வு என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று முதல் அரியலூர் - மணகெதி, திருச்சி - கல்லக்குடி, வேலூர் - வல்லம், தி.மலை - இனம்கரியாந்தல், விழுப்புரம் - தென்னமாதேவி சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. அதேபோல் ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்வு என தகவல் வெளியாகியுள்ளது. பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரனூர் சுங்கச்சாவடி - ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.45 முதல் ரூ.200 வரையிலும், உள்ளூர் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் ரூ.10 வரை உயர்வு என கூறப்படுகிறது.

இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva