வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2024 (06:59 IST)

மீண்டும் தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி.. சென்னையில் தேர்தல் பிரச்சாரம்

Annamalai Modi
பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர இருப்பதாகவும் அவர் சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு பதிவு ஏப்ரல் 20-ம் தேதி உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

ஒரு பக்கம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தை நோக்கி தேசிய தலைவர்களும் பிரச்சாரத்துக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின் படி பிரதமர் மோடி ஏப்ரல் 9ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வர இருப்பதாகவும் அவர் சென்னையில் வாகன அணிவகுப்பு மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு சேகரிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva