வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (19:19 IST)

மெரினா கடற்கரையில் இலவச வைஃபை சேவை !

மெரினா கடற்கரையில் இலவச வைஃபை சேவையை சென்னை மாநகரராட்சி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு  நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றீ பெற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

ஆட்சிக்கு வந்தது முதல் திமுக அரசு பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு வரும்   நிலையில்,   சென்னை  மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லுவதால், கடற்கரையை மேம்படுத்த, பொதுமக்களுக்கு இலவச வைஃபை வேவையை  மாநகராட்சி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்காக,  சென்னை  மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் பொதுமக்களுக்கு 30   நிமிடங்கள் இல்வசமாக வைஃபை வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏற்கனவே எம்.எல்.ஏ  உதய நிதி ஸ்டாலின் தன் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் இலவச வைஃபை தொகுப்பை   வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.