திமுகவில் இணைந்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ

stalin
Last Modified வெள்ளி, 22 மார்ச் 2019 (11:02 IST)
வரும் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான மக்களவை தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன. குறிப்பாக இந்த தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் திமுகவில் இணைய மாற்று கட்சியின் பிரமுகர்கல் பலர் தினந்தோறும் வந்த நிலையில் உள்ளனர். நேற்று அமமுகவில் இருந்து விபி கலைராஜன் திமுகவில் இணைந்த நிலையில் இன்று ஓமலூர் தொகுதி முன்னாள் பாமக எம்.எல்.ஏ தமிழரசு, சேலத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் சேலம் மாவட்ட பாமக செயலாளர் ஜெயவேல் உள்பட நூற்றுக்கணக்கான பாமகவினரும் திமுகவில் இணைந்தனர்

தேர்தல் நெருங்கும் நிலையில் பாமகவில் உள்ள பலர் திமுகவில் இணைந்துள்ளது திமுகவுக்கு பலத்தையும் பாமகவுக்கு பலவீனத்தையும் அளித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :