ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 21 மார்ச் 2019 (21:01 IST)

காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்...

கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணியை அறிவிக்கும் முன்னரே முகநுாலில் பிரச்சாரம் செய்து வரும் ஜோதிமணிக்கு எதிராக கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி தொகுதிகளிலிருந்து காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் பி.ஜெயபிரகாஸ் தலைமையில் அ.தி.மு.க., கட்சியில் சுமார் 360 க்கும் மேற்பட்டோர் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இணைந்தனர்.
அடுத்த மாதம் 18 ம்தேதி இந்தியாவின் 17  பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அ.தி.மு.க.,கட்சி கூட்டணி கட்சியினருக்கு இடம் ஒதுக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் துவங்கி விட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் தி.மு.க.,கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகித்து வருகிறது.
 
கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு தான் என்று தலைமை முடிவெடுத்துள்ள நிலையில் அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே, கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்வி ஜோதிமணி தான் என்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இதுவரை வேட்பாளர் அறிவிக்காத நிலையில் ஜோதிமணதான் என்று முகநுால்களில் வாக்கு சேகரித்து வருகிறார்.
 
கரூர் மாவட்டம்  அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பெரிய திருமங்கலம் பகுதியில் வசித்து வரும் ஜோதிமணிக்கு ராகுல்காந்தியின் நட்பு அதிகம் உள்ளதால் துணிச்சலாக வெளியிட்டு வருகிறார். கரூர் தொகுதிக்கு என்று 17 பேர் வேட்புமனு கட்சி தலைமையிடத்தில் கொடுத்த நிலையில்,ஆனால் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க்.சுப்பிரமணி உள்ளிட்ட சிலர் தனக்கு தான் சீட் வழங்க வேண்டும் என்று சென்னையில் முகாம் இட்டுள்ளனர். 
 
இந்நிலையில் தானே வேட்பாளர் என்றும், தாமாகவே சுயமாக முடிவெடுத்தது தான் கட்சியின் விதியா என்றும், பிறகு கட்சித்தலைமை எதற்கு என்று கூறியும் பேங்க்.சுப்பிரமணி ஆதரவாளர்கள் தற்போது நாள்தோறும் அ.தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். இன்று காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பி.ஜெயபிரகாஸ் தனது ஆதரவாளர்களுடன் 360 க்கும் மேற்பட்ட கட்சியினருடன் அ.தி.மு.க., கட்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இணைந்தனர். 
 
அ.தி.மு.க., கட்சியில் இணைந்த அவர்களை அமைச்சர் எம்.ஆர்.வ் விஜயபாஸ்கர் பொன்னாடை போர்த்தி வரவேற்றும், உங்கள் பகுதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.