திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 30 டிசம்பர் 2020 (14:07 IST)

பாஜகவில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

பாஜகவில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!
கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பலர் பாஜகவில் இணைந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். சமீபத்தில் குஷ்பு உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களும் பாஜகவில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்கள் பல பிரபலங்களை கட்சிக்கு வரவழைப்பதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பாஜகவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் தமிழக வீரர் ஒருவர் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் சில ஆண்டுகள் விளையாடியவர் தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். இவர் இன்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரிடம் பாஜகவின் உறுப்பினர் அட்டையை அவர் பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாஜகவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் இணைந்தது அந்த கட்சிக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்