திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2023 (12:12 IST)

’கோலமாவு கோகிலா’ காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

நெல்சன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா மற்றும் ஜாக்குலின் தந்தையாக நடித்த குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர் ஆர்எஸ் சிவாஜி சற்றுமுன் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
பிரபல தயாரிப்பாளர் எம்ஆர் சந்தானம் மகனும் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்எஸ் பாரதி சற்றுமுன் காலமானார். இதனை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்த அவரது வளசரவாக்கம் வீட்டிற்கு திரையுலகினர் விரைந்து வருகின்றனர்.  
 
கமலஹாசனின் பல படங்களில் ஆர்எஸ் சிவாஜி நடித்துள்ளார் என்பதும்  குறிப்பாக  அபூர்வ சகோதரர்கள், பம்மல் கே சம்பந்தம், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தந்தையாக அவர் நடித்து அசத்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ஆர்எஸ் சிவாஜியின் மறைவால் திரையுலகினார் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்
 
Edited by Mahendran