திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (14:27 IST)

முதல் முறையாக தீயணைப்பு துறையில் பெண்கள்: முதல்வர் ஒப்புதல்

fire department
முதல் முறையாக தீயணைப்பு துறையில் பெண்கள்: முதல்வர் ஒப்புதல்
முதல்முறையாக தீயணைப்புத் துறையில் பெண்கள் பணிபுரிய முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
இதுவரை தீயணைப்பு துறையில் ஆண்கள் மட்டுமே பணி புரிந்து வரும் நிலையில் முதல் முறையாக புதுவை முதல்வர் ரங்கசாமி தீயணைப்புத் துறையில் பெண்கள் பணிபுரிய ஒப்புதல் அளித்துள்ளார்
 
புதுவையில் தற்போது தீயணைப்புத் துறையில் 75 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கும் மனநிலையில் இதில் பெண்களும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
புதுவை முதல்வரின் இந்த அறிவிப்பு அம்மாநில பெண்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனால் புதுவையில் முதல்முறையாக தீயணைப்புத் துறையில் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran