டெங்குவுக்கு பலியான நடிகர் கருணாஸின் தங்கை மகள்

Sasikala| Last Modified வெள்ளி, 13 அக்டோபர் 2017 (15:56 IST)
டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் டெங்குக் காய்ச்சலுக்கு நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸின் தங்கையின் பத்து வயது மகள் உயிரிழந்துள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார்.

 
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், நான் ராமநாதபுரத்துக்கு துக்க காரியத்துக்கு சென்று கொண்டிருப்பதாகவும், மேலும் மருத்துவமனைகளில் 100 பேர் அனுமதிக்கப்படும் இடத்தில் தற்போது டெங்குக்  காய்ச்சலால் 1000 பேர் உள்ளனர். ஆனால், அந்த 1000 பேருக்கான மருந்துகளும் மருத்துவர்களும் போதிய அளவு இல்லை.
 
திருவண்ணாமலை, நாமக்கல், நாகை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற இடங்களில் அதிக அளவில் மக்கள் டெங்குவால்  பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். எனவே தமிழக அரசு உயிரிழப்புகளைத் தடுக்க போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :