1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2023 (08:23 IST)

சென்னை போத்தீஸ் ஜவுளிக்கடை குடோனில் தீ விபத்து: பெரும் பரபரப்பு..!

சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் ஜவுளி கடை வைத்திருக்கும் போத்தீஸ் நிறுவனத்தின் சென்னை தி.நகர் கிளையில் உள்ள குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
 
சென்னை தியாகராய நகரில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடையின் குடோனில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாகவும் சம்பவம் இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர் போராடி தீயை அணைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
தற்போது வந்துள்ள தகவலின் படி தீ முற்றிலும் அணைக்கப்பட்டதாகவும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
 
Edited by Siva