வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2023 (19:59 IST)

ஹம்சாஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து...

Rail Fire
திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் கங்கா நகர் செல்லும் ஹம்சாஃபர் விரைவு  ரயில் குஜராத் வல்சாத் ரயில் நிமையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டது.

சமீபத்தில் ஓடிஷா அருகே ரயில் விபத்து ஏற்பட்டு  பலர் பலியாகினர். இந்த சம்பவத்தை அடுத்து, ஆன்மிக சுற்றுலா ரயில் ஒன்று விபத்தில் சிக்கியது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் கங்கா நகர் செல்லும் ஹம்சாஃபர் விரைவு  ரயில் குஜராத் வல்சாத் ரயில் நிமையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த ரயில் எஞ்சினின் பின்புறம் உள்ள 3 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், ரயிலில் பயணித்த அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த விபத்து பற்றி ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம்  அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.