செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (08:40 IST)

பிப்ரவரி 8ஆம் தேதி விடுமுறையா? பொதுமக்கள் கோரிக்கை!

பிப்ரவரி 8ஆம் தேதி விடுமுறையா?
தமிழர்களை விருப்பத்துக்குரிய கடவுளான முருகப் பெருமானுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தைப்பூசத் திருவிழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் குறிப்பாக அறுபடை வீடுகளில் மிகச்சிறப்பான முறையில் தைப்பூசம் கொண்டாட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிப்ரவரி 8ஆம் தேதி தைப்பூசத் திருநாளன்று முருகன் கோவில்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அன்றைய தினம் விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி தைப்பூச தினத்தன்று தமிழக அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் உள்பட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு பிப்ரவரி எட்டாம் தேதி விடுமுறை அறிவிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 
 
மற்ற மதங்களின் சிறப்பு தினங்கள் அன்று விடுமுறை அளித்து வரும் தமிழக அரசு இந்து மதத்தின் முக்கிய நாளான தைப்பூசத்தன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த கோரிக்கையை தமிழக அரசு கவனத்தில் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது