1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (13:56 IST)

5,8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு ரத்து – தமிழக அரசு உத்தரவு!

கோப்புப்படம்

இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இது ஆசிரியர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலர் இந்த தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று வரை பொதுத்தேர்வு நடைபெறும் என அதற்கான பணிகள் தொடர்ந்த நிலையில் இன்று பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பரிசீலித்து இந்த முடிவினை எட்டியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.