1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (21:39 IST)

மக்கள் மன்ற கூட்டத்தில் ரஜினி கூறியது என்ன? நிர்வாகிகள் தகவல்!

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்தார். அப்போது அவர் என்ன கூறினார் என்பதை தற்போது ரசிகர்கள் வெளியேறியுள்ளனர் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் மீது கூறிய போது ’மக்கள் மன்றமாக இருக்கும்வரை அரசியல் குறித்த சந்தேகம் நீடித்துக் கொண்டே இருக்கும். நம் நிர்வாகிகள் பிற கட்சிகளில் சேரும்போது ரஜினி மன்றத்திலிருந்து வந்ததாகச் சொல்வார்கள்.
 
உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரை பயன்படுத்தி சிலர் களமிறங்கும் வாய்ப்பு உண்டு. கட்சி தொடங்குவதற்காக ஆயிரக்கணக்கான நூல்களை உருவாக்கி இருக்கிறோம். அவர்களை விடுவித்து சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும்.
 
அரசியல் கட்சிகளுக்கு செல்ல விரும்புபவர்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். எனது ரசிகர் மன்றத்தில் அரசியல் சார்பு இன்றி மக்கள் பணியாற்ற விரும்புபவர்கள் மட்டும் என்னுடன் இருக்கலாம் என்று கூறியதாகவும் உடனே ரசிகர்கள் அனைவரும் உருக்கத்துடன் உங்களுடன்தான் இருப்பேன் என்று ஒருமித்த குரலில் தெரிவித்ததாகவும் அந்த ரசிகர் கூறியுள்ளார்