வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 12 செப்டம்பர் 2018 (14:37 IST)

பிளாஸ்டிக் பையால் மூடி அரசு பெண் ஊழியர் தற்கொலை : பாலியல் தொல்லை காரணமா?

மேலதிகாரியின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல், அரசு பெண் ஊழியர் ஒருவர் தன் முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தூத்துக்குடி கோரளம்பள்ளத்தில் அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வி. இவர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் ஊரக வளர்சித்துறையில் பணிபுரிந்து வந்தார். இவரின் கணவர் செந்தில்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் தமிழ்ச்செல்வி தனியாக வசித்து வந்தார். 
 
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணிமுடிந்த வீட்டிற்கு வந்த அவர் 2 நள் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரின் வீட்டுக்கதவை நீண்ட நேரம் தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை. எனவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து, அங்கு வந்த போலீசார் அவரின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து இறந்து கிடந்தார். எனவே, அவரின் உடலை போலீசார் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
அலுவலகத்தில் உயர் அதிகாரி ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஏற்கனவே ஒருமுறை தமிழ்ச்செல்வி தற்கொலைக்கு முயன்று காப்பற்றப்பட்டார். எனவே, பாலியல் தொல்லை காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. 
 
இது தொடர்பாக கலெக்டர் உத்தரவிட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.