Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தீபா வீட்டில் நுழைந்த போலி அதிகாரி போலீசில் சரண்

Last Updated: திங்கள், 12 பிப்ரவரி 2018 (07:42 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் வருமான வரி சோதனை செய்யும் அதிகாரி போல் ஒருவர் நடித்தார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த மர்ம நபர் சுவரேறி குதித்து தப்பிவிட்டார்

இந்த நிலையில் தீபா வீட்டில் நுழைந்த போலி அதிகாரியை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சல்லடை போட்டு தேடப்பட்டது. இந்த நிலையில் ஜெ.தீபா வீட்டில் நுழைந்த போலி வருமானவரித்துறை அதிகாரி நேற்றிரவு சரணடைந்தார்.

மாம்பலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்த அந்த போலி ஐ.டி அதிகாரியின் உண்மையான பெயர் பிரபு என்றும், அவரிடம் மேலும் மாம்பலம் காவல்நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :