வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 நவம்பர் 2018 (15:57 IST)

அதிதீவிர கனமழை ! வட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் திண்டுக்கல் ,புதுக்கோட்டை, கடலூர், நாகை, திருவண்ணாமலை, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வங்கக் கடலில் உருவாகி நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் உள்ள கடலோர  மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
 
இன்று சென்னையில் பெருவாரியான இடங்களில் மழை பெய்து பூமியை குளிர்வித்துள்ளது.
 
ஆனால்  சென்னையில் மழைபெய்த இடங்களில் சாலையில் மழைநீர் தேங்யுள்ளதால் போக்குவரத்தை கடுமையாக பாதித்தது.
 
கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் தமிழகம் இன்னும் மீண்டெழாமல் உள்ள நிலையில் மீண்டும் 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.