வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 பிப்ரவரி 2019 (13:53 IST)

ரஜினியை சந்தித்த அனுபவம் ...விஜயபிரபாகரன் நெகிழ்ச்சி

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது உடல் நிலை சரியான நிலையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று அவரை சந்திக்க நடிகர் ரஜினி சென்றார். இது ஊடகங்களில் பரபரப்பு செய்தியாக ஒளிபரப்பப்பட்டன.
உடல் நிலை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்று, நல்ல ஆரோக்கியத்துடன் சென்னைக்கு திரும்பியுள்ள விஜயகாந்தை சந்திக்க சென்ற ரஜினிகாந்துக்கு பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் இருவரும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
 
மேலும்  இந்த சந்திப்பில் அரசியல் இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் அண்மைக்காலமாக அரசியல் மேடைகளில் தன் தந்தை விஜயகாந்துக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ள விஜய பிரபாகரன் பேச்சை பற்றி இந்த சந்திபின் போது ரஜினி அவரிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
 
இதனால் விஜய பிரபாகரன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன.