திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (15:21 IST)

ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற தமிழகத்தின் முதல் அரசு பள்ளி! – புதிய சாதனை!

ஈரோடு மாவட்டத்தில் அரசு மகளிர் பள்ளி சுகாதாரமான சமையல் கூடத்திற்கான ஐஎஸ்ஓ தரச்சான்றை பெற்று சாதனை படைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் மாநகராட்சி மகளிர் மேல்நிலை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியின் சமையற் கூடம் சுகாதாரமற்ற முறையில் இருந்த நிலையில் அதை செப்பனிட அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி தடைக்கு டைல்ஸ் அமைக்கப்பட்டதுடன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுதாதபடி மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வி சீராக மண்பாண்டங்கள், எவர்சில்வர் பாத்திரங்கள் பெறப்பட்டு அதன் மூலம் உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பள்ளியிலேயே காய்கறிகளுக்கு தேவையான சிறு தோட்டம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சுகாதாரமான இந்த சமையலறை கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று கேட்டு விண்ணப்பித்த நிலையில் ஐ.எஸ்.ஓ தரச்சான்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஐ.எஸ்.ஓ தரச்சான்றை வழங்கியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்திலேயே முதன்முறையாக ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று சாதனை படைத்துள்ளது அந்த பள்ளி.