வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (13:41 IST)

நெடுஞ்சாலை விபத்துகளுக்கு ரூ.1 லட்சம் உடனடி மருத்துவ உதவி! – அமைச்சர் அறிவிப்பு!

தமிழக நெடுஞ்சாலைகளில் விபத்துக்குள்ளாகும் நபர்களுக்கு உடனடி சிகிச்சைக்காக தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் பலவற்றிலும் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் அளவிற்கு விபத்து சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் “தமிழக நெடுஞ்சாலைகளில் விபத்துக்கு உள்ளாபவர்களுக்கு அவசர மருத்துவ உதவிக்காக ரூ.1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும். விபத்துக்கு உள்ளாகும் நபர்கள் இதர மாநிலத்தினரோ அல்லது நாட்டினராகவோ இருந்தாலும் இது பொருந்தும்” என கூறியுள்ளார்.